Kilambakkam Issue| மீண்டும் கிளாம்பாக்கத்தில் களேபரம்.. களத்தில் இறங்கிய அமைச்சர்
மீண்டும் கிளாம்பாக்கத்தில் களேபரம்.. அதிகாரிகளின் அதிர்ச்சி பதில்.. அமைச்சரே களத்தில் இறங்கியதால் பரபரப்பு #kilambakkamissue #kilambakkambusstandissue
கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் புகார் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பயணிகள், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல போதுமான பேருந்துகள் இல்லையென குற்றம் சாட்டினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அதிகாரிகள் கழிப்பறைக்குச் சென்றுள்ளதாகவும், வந்துவிடுவார்கள் என்றும் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், கொந்தளித்தனர். இதற்கிடையே, கூட்ட நெரிசல் மற்றும் பேருந்துகள் பற்றாக்குறை குறித்து அமைச்சர் தமிழன் பார்த்திபன் அதிகாலை நேரில் ஆய்வு செய்து, முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
