"சுடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை இல்லை" கிராம மக்கள் வேதனை

x

சோழவரம் அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால், இறந்தவரின் சடலத்தை வயலிலும், கரடுமுரடான வழியில் எடுத்துச் செல்லும் அவலநிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பள்ளசூரப்பட்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களை அடக்கம் செய்வதற்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் 24 அடி அகலமுள்ள சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள சாலையை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால், இறந்தவரின் உடலை வயல்வெளி மற்றும் கரடுமுரடான பாதையில் எடுத்துச் செல்லும் அவலநிலை நீடித்து வருவதாக கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்