"ஊருக்கு பஸ்ஸே வர்ரதில்ல".. மாற்றி யோசித்த கிராமத்தார்.. களமிறங்கிய இலவச பேட்டரி ஆட்டோ
"ஊருக்கு பஸ்ஸே வர்ரதில்ல".. மாற்றி யோசித்த கிராமத்தார்.. களமிறங்கிய இலவச பேட்டரி ஆட்டோ
கிராம மக்கள் பயணிக்க ஏதுவாக இலவச ஆட்டோ வசதியை ஏற்படுத்தியுள்ள கிராமம் முன்னுதாரணமாக மாறியுள்ளது...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஆதனூர் ஊராட்சியில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பேருந்துகள் சரிவர இயங்காது என கூறும் மக்கள், வேலைக்கு செல்வது, பள்ளி, கல்லூரி செல்வது, மருத்துவமனை செல்ல என பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதை தவிர்க்கும் விதமாக 7 பேட்டரி ஆட்டோக்கள் வாங்கி இயக்கி வருகின்றனர். கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் வரை இயக்கப்படும் ஆட்டோவுக்கு பாஸ் வாங்க வேண்டியது கட்டாயம். தலா 4 பேர் வரை ஆட்டோவில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலை மற்றும் மாலை வேலைகளில் பயணிக்க ஏதுவாக, கூடுவாஞ்சேரி பகுதிகளுக்கு ஆட்டோ இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.