Minister T.M.Anbarasan Speech | தமிழகத்துக்கு மத்திய அரசு பாராட்டு - அமைச்சர் பெருமிதம்
அதிமுக ஆட்சியை விட MSME துறைக்கு, தற்போது அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் மூவாயிரத்து 617 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால், இந்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் என இரண்டு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார். MSME துறை முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் கொண்டுவந்துள்ள முன்னோடி திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருவதாக தெரிவித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் திட்டங்கள் உள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
Next Story

