தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பவம் இருக்கு.. Heavy Rain அலர்ட்.. எந்தெந்த நாளில் எங்கெங்கு?
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பவம் இருக்கு.. Heavy Rain அலர்ட்.. எந்தெந்த நாளில் எங்கெங்கு?
அடுத்த 24 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. 8ம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது... 9ம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்... அதேபோல் வரும் 10 ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
