பண்ருட்டி அருகே தென் பெண்ணையாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் மேல்குமாரமங்கலம் தென் பெண்ணையாற்றில் மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மணல் ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், லாரியை காவல் நிலையம் எடுத்துச்சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.