Thenkasi Dog Bites | 2 நாட்களில் 48 பேரை விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்
Thenkasi Dog Bites | 2 நாட்களில் 48 பேரை விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கடந்த இரண்டு நாட்களில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 48 நபர்களை தெரு நாய்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு சிகிச்சை எடுத்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 15 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் சாலைகளில் நடமாட முடியாத சூழல் உள்ளதாலும், நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
Next Story
