வீட்டுக்குள் கேட்ட பேரிடி சத்தம் - ஓடிப்போய் ஃபிரிட்ஜ்-யை பார்த்தால் அதிர்ச்சி
வீட்டுக்குள் கேட்ட பேரிடி சத்தம் - ஓடிப்போய் ஃபிரிட்ஜ்-யை பார்த்தால் அதிர்ச்சி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே, வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்துச் சிதறியதில் பொருட்கள் சேதமடைந்தன. குமரேசபுரம் காலனியைச் சேர்ந்த சந்தோஷ்-சந்தனமாரி தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் புதிய வீட்டில் இரவு தூங்கியுள்ளனர். சந்தோஷின் பழைய வீட்டில் சந்தனமாரியின் தாயார் சுசிலா தூங்கியுள்ளார்.
இந்நிலையில், பழைய வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்துச் சிதறியதில் நோட்டுப் புத்தகங்கள், சமையல் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
