ஒரு குடும்பத்தையே ஒதுக்கி வைத்த ஊர் மக்கள்... காரணத்தை கேட்டால் பேரதிர்ச்சி

x

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, கலப்புத் திருமணம் செய்ததால், ஒரு குடும்பத்தையே கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நீரார்பட்டி கிராமத்தில் நாகரத்தினம் - கலா தம்பதியினரின் மகன் ராஜசேகர், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனை கிராம மக்கள் ஏற்காத நிலையில், நாகரத்தினம் குடும்பத்தினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாகரத்தினம் தனது குடும்பத்தினருடன் ஆண்டிப்பட்டியில் குடியேறினார். இந்நிலையில், தங்களை ஊருக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்