கோவிலுக்குள் ஆபாச வேலை..சிக்கி மரண பீதியான அர்ச்சகர்.. வெறிகொண்டு காத்திருந்த மக்கள்

தேனி பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் 70 வயது திலகர் என்ற முதியவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோவில் முன்பாக கூடியதைத் தொடர்ந்து, அவர்கள் தன்னைத் தாக்கி விடுவார்கள் என எண்ணி பூசாரி திலகர் கதவைப் பூட்டிக் கொண்டு கோவிலுக்குள் ஒளிந்து கொண்டார். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஒளிந்திருந்த பூசாரியை வெளியில் கொண்டு வந்தனர். உறவினர்கள் திரண்டு வந்து பூசாரியைத் தாக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com