Theni | திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்று - ஒரே நாளில் தலைகீழாக மாறிய காட்சி.. குமுறும் மக்கள்

Theni | திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்று - ஒரே நாளில் தலைகீழாக மாறிய காட்சி.. குமுறும் மக்கள்

பலத்த சூறாவளிக் காற்றால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் முந்தல் மற்றும் மேலப்பரவு கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்ததில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். மேலப்பரவு மலைவாழ் கிராமத்தில் வீசிய காற்றால் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததோடு, பல வீடுகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன. எதிர்பாராத இந்த இழப்பால் தவித்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com