Theni | Lorry Accident | உடல் நசுங்கி பலியான கணவன்.. உடலை கட்டியணைத்து கதறி அழுத மனைவி

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரை சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநர் பொன் கிருஷ்ணன் ஆண்டிப்பட்டியில் இருந்து வைகை அணை அருகே தனியார் கல்குவாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றுவதற்கு டிப்பர் லாரியை ஒட்டி சென்றபோது வைகை அணை அருகே உள்ள வனவியல் கல்லூரி பகுதி சாலை வளைவில் லாரியை வளைக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்ததில் கீழே விழுந்த ஓட்டுநர் பொன் கிருஷ்ணன் லாரிக்கு அடியில் சிக்கியதால் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்