அடிப்படை வசதிகள் இல்லாத அரசு கல்லூரி... அரசு நடவடிக்கை எடுக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை...

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் சார்பில் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அடிப்படை வசதிகள் இல்லாத அரசு கல்லூரி... அரசு நடவடிக்கை எடுக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை...
Published on

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மதுரை

காமராஜர் பல்கலைக் கழகம் சார்பில் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் படித்து வரும் இந்த கல்லூரியில் பி.ஏ, பி.எஸ்.சி, பிகாம் உள்ளிட்ட 4 இளங்கலை பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி தொடங்கிய நாள் முதல் இதுவரை போதுமான வகுப்பறைகள், கழிப்பிடங்கள், குடிநீர், சுற்றுச்சுவர், மைதானம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்று மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை பயன்படுத்த இயலாத நிலை உள்ளதாகவும், கல்லூரி வளாகம் புதர் மண்டி கிடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அடிப்படை

வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com