Theni | Fire Accident | ஓடும்போதே திடீரென எரிந்து கருகிய வேன்.. பயணிகள் நிலை? - தேனியில் பரபரப்பு

x

தேனி மாவட்டத்தில் எ. புதுப்பட்டி அருகே சாலையில் சென்ற டெம்போ ட்ராவலர் வேன், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த வேனின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனே ஓட்டுநரும், பயணிகளும் வேனிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். இதையடுத்து வேன் மலமலவென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முற்றிலும் எரிந்து சேதமானது.


Next Story

மேலும் செய்திகள்