Theni Fake Police | வாகனங்களை வழிமறித்து வசூல் வேட்டை - 6 மாதமாக தில்லுமுல்லு

x

Theni Fake Police | வாகனங்களை வழிமறித்து வசூல் வேட்டை - 6 மாதமாக தில்லுமுல்லு

போடிநாயக்கனூர் அருகே எஸ்.ஐ. எனக் கூறி, வாகனங்களில் வருபவர்களிடம் வசூல் வேட்டையில் ஒருவர் ஈட்டுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே காவல்துறை துணை ஆய்வாளர் என்று கூறி, வாகனங்களை வழிமறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். மதன் பிரபு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், தேனி அல்லிநகரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர். இவர், கடந்த 6 மாதங்களாக போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பதாக கூறி, வாகனங்களை வழிமறித்து பணம் பறித்ததுடன், மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மணல் லாரி வாகனங்களில் செல்வோரை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்