

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 2018ம் ஆண்டில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால், கூடுதலாக 4 ஆண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.