Theni | Black Magic | பில்லி, சூனியம் வைத்த மூதாட்டி? - துடிக்க துடிக்க கொன்ற அக்கா, தங்கை
Theni | Black Magic | குடும்பத்திற்கே பில்லி, சூனியம் வைத்த மூதாட்டி? - துடிக்க துடிக்க கொன்ற அக்கா, தங்கை.. நடுநடுங்க விட்ட சகோதரிகள் தேனி மாவட்டம் வருசநாடு அருகே குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்ததாகக் கூறி, மூதாட்டியைத் திட்டமிட்டு கொலை செய்த அக்கா மற்றும் தங்கையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஜக்கம்மாள் என்ற மூதாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான போலீஸ் விசாரணையில், மூதாட்டியின் அக்கா மகள்களான அய்யம்மாள் மற்றும் நாகராணி ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. மூதாட்டி வைத்த பில்லி சூனியத்தால் தான் தங்களது பெற்றோர்கள் உயிரிழந்ததாகவும், தங்கள் குடும்பத்திற்கும் உடல்நலக் குறைவு மற்றும் கஷ்டங்கள் ஏற்பட்டதாகவும் அதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
