தேனி மாவட்டம் பெரியகுளம் ஏடிஎம் எந்திரத்தில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்காமல் சென்றதால் அடுத்து பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார்.. அரண்மனைத் தெருவில் தனியார் வங்கியின் ஏடிஎம் எந்திரம் உள்ளது. இங்கு பணம் எடுக்க வநத் வாடிகையாளர் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்காமல் செனறு விட்டார். அப்போது அங்கு சென்ற கிருஷ்ணன் என்பவர் 10 ஆயிரம ரூபாய் இருப்பதை கண்டார். இதனைடுத்து அந்த பணத்தை அவர் பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் வங்கி மேலாளரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.