தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்துப்பிரச்னை காரணமாக கணவன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை வசித்து வரும் மகேந்திரன், தங்கமணி தம்பதியினரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் .தனது தாய் ஒச்சம்மாள் தமக்கு எழுதி கொடுக்கப்பட்ட வீட்டை அபகரிக்க முயல்வதாக கூறி,
ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார், இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக தேனி காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.