தேனி - விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த ராணுவ வீரர் தற்கொலை
தேனியில் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த இளம் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னமனூர் மின் நகர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகனான பொன்சங்கர் என்பவர் சிக்கிம்மில் இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பாக சொந்த ஊர் வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, பொன்சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
