``அப்போ எனக்கு பசிக்கும்ல''.. பால் பாக்கெட்டுகளை ருசி பார்த்த கரடி
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா பகுதியில் நின்று கொண்டிருந்த பால் வாகனத்தை திறந்து பாலை ருசித்த கரடியின் சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா பகுதியில் நின்று கொண்டிருந்த பால் வாகனத்தை, அந்த வழியாக வந்த கரடி திறந்து, பால் பாக்கெட்டுகளை எடுத்து ருசி பார்த்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சி, கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
