மயிலாடுதுறையை கதிகலங்க வைத்த திருட்டு.. அள்ள அள்ள தங்கம்.. திருடனை தட்டி தூக்கிய போலீஸ்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 80 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது. இது தொடர்பான வழக்கில் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கும்பகோணம் சிறையிலிருந்த கொள்ளையனை நீதிமன்ற காவலில் எடுத்து, பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 53 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
