சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 82 செல்போன்கள், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் திருட்டு புகார் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து மேற்கொண்ட விசாரணையில் திருடர்களிடம் இருந்தும், அவற்றை தெரியாமல் வாங்கிய நபர்களிடம் இருந்தும் இந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையொட்டி, தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருடப்பட்ட மொபைல் போன்களை, அதன் உரிமையாளர்களிடம் துணை ஆணையர் அசோக்குமார் வழங்கினார்.