கோட்டை வடிவில் பிரமாண்ட கட்அவுட் - பைசன் படத்தை கொண்டாடி தீர்த்த மாரி செல்வராஜ் கிராம மக்கள்
பைசன் திரைப்படம் வெளியானதை ஒட்டி இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தனர்.இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் திரைப்படம் வெளியானது. மாரி செல்வராஜின் சொந்த ஊரான நெல்லையிலுள்ள புளியங்குளம் பகுதி மக்கள், படம் வெற்றியடைய வேண்டி, மேளதாளங்களுடன் பால்குடம் எடுத்து ஆடி பாடி திரையரங்கை வந்தடைந்தனர். மேலும் மாரி செல்வராஜுக்கு கோட்டை வடிவில் பிரம்மாண்ட கட்அவுட் வைத்து பால் அபிஷேகமும் செய்தனர்.
Next Story
