அலகு குத்தி வாகனத்தை இழுத்த போது நொடியில் முதுகு கிழிந்து கதறிய இளைஞர்கள்
ஸ்ரீபெரும்புதூரில் நேர்த்திக்கடன் என்ற பெயரில் அலகு குத்தி வாகனத்தை இழுத்து சென்ற இளைஞர்களின் முதுகு கிழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியில் உள்ள கொல்லாபுரி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, இரண்டு இளைஞர்கள் முதுகில் அலகு குத்தி ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் கூட்டு சாலையில் வாகனத்தை இழுத்து சென்றனர்.
அப்போது, அந்த வாகனத்தில் திடீரென பிரேக் பிடிக்காததால், இளைஞர்கள் பயத்தில் ஒதுங்கியபோது, இருவரும் தடுமாறி விழுந்தனர்.
இருவருக்கும் முதுகில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், அந்த வழியாக வாகனங்கள் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Next Story
