சென்னையின் இரவை அதிர வைத்த இளைஞர்கள்..ஷாக்கான பொதுமக்கள்

சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது...

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பைக் ரேஸ்

கோயம்பேடு முதல் அடையார் வரை அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

சென்னை கோயம்பேட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அதிவேகமாக சாலையில் ரேஸில் ஈடுபடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கக்கூடிய வீடியோவை அதில் ஒரு நபர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

ரெட் அலர்ட் என்ற முறையில் சென்னையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகன சாகசம் மற்றும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com