ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் நாளை தொடக்கம் -களமாட காத்திருக்கும் முரட்டு வீரர்கள்

x

Grand Slam Tennis | ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் நாளை தொடக்கம் - களமாட காத்திருக்கும் முரட்டு வீரர்கள்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற Flushing Meadows ஆடுகளத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு முதல் சுற்றுப் போட்டிகள் தொடங்க உள்ளன.

ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனும் இத்தாலியைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரருமான யானிக் சின்னர், ஸ்பெயின் நட்சத்திரம் அல்கராஸ், செர்பியாவின் முன்னணி வீரர் ஜோகோவிச், ஜெர்மனி வீரர் ஸ்வரெவ், அமெரிக்க வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸ் உள்ளிட்டோர் களமாடக் காத்துள்ளனர்.

மகளிர் பிரிவில் பெலாரஸைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காஃப், போலந்து வீராங்கானை இஹா ஸ்வியாடெக், ஜெசிக்கா பெகுலா உள்ளிட்டோர் சாம்பியன் பட்டத்துக்காக மல்லுக்கட்ட உள்ளனர்.

அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் வாகை சூடும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு தலா 43 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்