தொடங்கியது உலக புகழ்பெற்ற...பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா...லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து

தொடங்கியது உலக புகழ்பெற்ற

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா

லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல்

குண்டம் திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் இருந்து படைக்கலத்துடன் பண்ணாரி அம்மன் அழைத்து வரப்பட்டார். அதை தொடர்ந்து கோவில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலர் பந்து உருட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், தீக்குழி முன் சிறப்பு பூஜை செய்து பூசாரி பார்த்திபன் பய பக்தியுடன் குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து பரம்பரை அறங்காவலர் கள் கோவில் பணியாளர்கள் குண்டம் இறங்கினர். பின்னர் வரிசையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, ஈரோடு எஸ்பி ஜவஹர் தலைமையில் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com