மாவு அரைத்த பெண் பலி - சென்னையை அதிர வைத்த கிரைண்டர் மரணம்

சென்னை கே.கே.நகரில் கிரைண்ரில் மாவு அரைத்த போது, மின்சாரம் பாய்ந்து வசந்தி என்ற பெண் உயிரிழந்தார். தாயின் அலறல் கேட்டு ஓடி வந்து காப்பாற்ற முயன்ற மகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இருவரின் சப்தம் கேட்டு ஓடி வந்த மகள், கட்டையால் சகோதரனை அடித்து காப்பாற்றி உள்ளார். அப்போது, மயக்கம் அடைந்து கீழே விழுந்த வசந்தி, உடனே கே.கே.நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே, அந்த பெண் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com