Thanjavur GH | கர்ப்பிணி போல் வயிற்றில் துணியை கட்டி வந்த பெண் | கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்

கர்ப்பிணி போல் வயிற்றில் துணியை கட்டி வந்த பெண் | கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்

Thanjavur GH | கர்ப்பிணி போல் வயிற்றில் துணியை கட்டி வந்த பெண் | கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் #thanajvur #govthospital #TNpolice #thanthitv தஞ்சையில் வயிற்றில் துணி கட்டி கர்ப்பிணி போல் நாடகமாடிய பெண் தஞ்சை அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டில், சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த பெண்ணை நோயாளிகளின் உறவினர்கள் பிடித்து சோதித்தபோது, வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கர்ப்பிணி போல் நாடகமாடியது தெரியவந்தது. குழந்தையை கடத்த வந்திருக்கலாம் என சந்தேகித்து, அவருடன் வந்த இரண்டு பெண்களையும் சேர்த்து மருத்துவமனை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி நோயாளிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், கணவரின் குடும்பத்தினரை ஏமாற்ற கர்ப்பிணி போல் நடித்ததாக கூறப்படுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com