நீதிபதியிடம் சாட்சிகள் சொன்ன விஷயம்.. மரப்பெட்டியில் எவிடென்ஸ்
திருப்புவனத்தில் முகாமிட்டுள்ள நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டார். போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் 8ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி 3வது நாளாக சுமார் 9 மணி நேரமாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி, அஜித்குமாரை ஆட்டோவில் ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் அஜித்குமார் தரப்பு வழக்கறிஞரான கார்த்திக் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டார். 3 ஆம் நாள் விசாரணையின் முடிவில், சாட்சியங்கள் மற்றும் காவல்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வைக்க மரப்பெட்டி கொண்டு வரப்பட்டு அதில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன