வீட்டு கதவை மெதுவாக திறந்த மனைவி - அந்த இடத்திலே சமாதி கட்டிய கணவன்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, நள்ளிரவில் வேலை முடித்து வீடு திரும்பியபோது தாமதமாக கதவை திறந்ததால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். விஜயமங்கலம் அம்மன்கோயில் அருகில், கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர், தங்கள் ஐந்து வயது மகனுடன் வசித்து வந்தனர். ஸ்பின்னிங் மில்லில் ஃபிட்டராக பணிபுரிந்து வரும் கணேஷ்ராஜ், இரவில் பணி முடிந்து வீடு திரும்பியபோது, தனது மனைவி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கணேஷ்ராஜ் இரவில் வீடு திரும்பியபோது பலமுறை கதவை தட்டியும் திறக்காத ஆத்திரத்தில், மனைவியை, குழந்தை விளையாடும் மூன்று சக்கர சைக்கிளால் தலையில் தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கணேஷ்ராஜை போலீசார் கைது செய்தனர்.
Next Story
