``ஊரே குலைநடுங்கி ஓட இவன் செஞ்ச வேலைய பாருங்களேன்’’ - கொதிக்கும் மக்கள்

வெடி விபத்தின் பரபரப்புக்கிடையே ஆம்புலன்ஸை திருட முயன்ற இளைஞர்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தின் களேபரத்துக்கு இடையே ஆம்புலன்ஸ் வாகனத்தை திருட முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் இருந்த போது, இரு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பட்டாசு ஆலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பரபரப்பை பயன்படுத்தி மடத்துப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிக் கொண்டு பட்டாசு ஆலையை விட்டு வெளியேற முயன்றுள்ளார். இதைக் கவனித்த மக்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com