முறைப் பெண், முறைப் பையன் மீது மஞ்சள் நீர் ஊற்றி ஆடிப் பாடி சந்தோஷம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 157 ஆண்டாக பாரம்பரிய மஞ்சள் தண்ணீர் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 1 வாரத்திற்கு முன் ஆடி முளைப்பாரி திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் தண்ணீரை ஆண்கள் தங்களது முறைபெண்கள் மீதும் , பெண்கள் தங்களது மாமன், மச்சான் மீதும் ஊற்றி மகிழ்ந்தனர்.
Next Story
