களைகட்டிய புலிக்களி நடனம் - ஜொலிஜொலித்த கேரளா.. மளமளவென குவிந்த மக்கள்

x

கேரள மாநிலம், திருச்சூரில் ஓணம் பண்டிகையை ஒட்டி "புலிக்களி " நடனம் கோலாகலமாக நடைபெற்றது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புலி போன்று தத்ரூபமாக வர்ணம் தீட்டியும், புலி முகத்துடன் முகமூடி அணிந்தும் ஆண்டுதோறும் "புலிக்களி " நடனம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திருச்சூரில் 459 கலைஞர்கள், புலி போன்று வேடம் அணிந்து மேளதாளத்துடன் நகரை சுற்றி வலம் வந்தனர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான மக்கள் இதை கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்