தொடரும் அட்டகாசம் - நாய் முதல் குழந்தைகள் வரை..கடித்து குதறும் குரங்குகள்

x

குரங்கு கடித்து 3 வயது குழந்தை படுகாயம்

பட்டுக்கோட்டையில் குரங்கு கடித்து மூன்று வயது குழந்தை காயம்- அரசு மருத்துவமனையில் அனுமதி- குரங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி உட்பட்ட ஆர்வி நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர்கள் திருநாவுக்கரசு -கலைவாணி தம்பதியினர். திருநாவுக்கரசு அரசு பள்ளி ஆசிரியராக இருந்து வருகிறார். இவர்களுக்கு திகழினி என்ற ஒரு பெண் குழந்தை 3 வயதில் உள்ளது .இந்நிலையில் இன்று காலை கலைவாணி வீட்டு வராண்டாவில் அமர்ந்து கொண்டு தன்னுடைய குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த பொழுது அந்த பகுதியில் இருந்து திடீரென வந்த ஒரு குரங்கு குழந்தையை கடித்துவிட்டு ஓடிவிட்டது. இதனால் காதில் காயம் பட்ட அந்த குழந்தையை பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்.வி நகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து குரங்குகள் நடமாட்டம் உள்ளதாகவும் குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறைக்கு பல முறை கோரிக்கை வைத்தும் இது நாள் வரை வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முன் ஒரு குழந்தையையும் நாய்களையும் குரங்குகள் கடித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்