மறைந்த சிரிப்பின் தனி அடையாளம்... மதன் பாப் உடல் இன்று தகனம்

x

நடிகர் மதன்பாப்பின் உடல் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மதன் பாப், 1953ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். பின்னர் நகைச்சுவை நடிகராகி, தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்தவர். சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 71 வயதை எட்டிய அவர், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்