ஒட்டுமொத்த அரசியல் களத்தின் பார்வையையும் திருப்பிய தவெக `மேடை’

x

தவெக மாநாடு மேடையில் அண்ணா, எம்ஜிஆருடன் விஜய்

மதுரையில் தவெக மாநாடு மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆருடன் விஜய் புகைப்படத்தை வைத்து அமைக்கப்பட்ட கட்-அவுட் அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.

தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக மாநாடு திடல் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. குறிப்பாக, மேடையில் வைக்கப்பட்ட அலங்கார கட்-அவுட்டில் 1967ஆம் ஆண்டு அண்ணா முதன்முறையாக முதலமைச்சர் ஆனதையும், 1977ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதன்முறையாக முதலமைச்சர் ஆனதையும் சுட்டிக்காட்டி, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாகை சூட விஜய் வருவதாக தவெகவினர் முகப்பு பேனர் வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்