சூறாவளி காற்றினால் ஆசிரியை மீது விழுந்த மரம் - சிகிச்சை பலனின்றி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

குன்னூரில் மரம் விழுந்ததில் அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூறாவளி காற்றினால் ஆசிரியை மீது விழுந்த மரம் - சிகிச்சை பலனின்றி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
Published on

குன்னூரில் மரம் விழுந்ததில் அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்றும் வீசுவதால், குன்னூர் ஜெகதளா ஓதனட்டி கிராமத்தில் கற்பூர மரம் ஒன்று சரிந்து விழுந்தது. அப்போது, வண்டிச்சோலை அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மகேஸ்வரி எனும் ஆசிரியை மீது மரம் விழுந்தது. தலை மற்றும் கை கால்களில் பலத்தகாயமடைந்த அவர், ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com