எல்லாம் கூடி வந்த நேரத்தில் நேர்ந்த துயரம்
ராணிப்பேட்டையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில், அப்பகுதிகளில் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். உடனே, சேதத்தை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
