தங்கத்தால் மினுமினுக்கும் திருச்செந்தூர் மூலவர் கோபுரம்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவர் சன்னதியின் கோபுர விமான கலசத்திற்கு தங்கமூலம் பூசி, புதுப்பிக்கப்பட்டு மீண்டும் கோபுரத்தில் பொருத்தப்பட்டது.300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பெருந்திட்ட பணிகளின் ஒரு பகுதியாக, ராஜகோபுரத்தின் 9 கலசங்களும் முன்னதாக புதுப்பிக்கப்பட்டன. வரும் ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை ஒட்டி, பழைய செப்பு பட்டயம் மற்றும் புதிய பட்டயங்களுடன் கலசத்தில் குடமுழுக்கு பத்திரிக்கையும், புது வரகும் வைக்கப்பட்டு தங்கமூலம் பூசப்பட்ட கலசங்களில் வைத்து விமானத்தில் பொருத்தப்பட்டது. இதையடுத்து யாகசாலையில் கலச பூஜை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்