தமிழகத்தின் கனவை படுகொலை செய்து வடமாநிலத்திலிருந்து அனுப்பிய கொடூரர்கள்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரரான மதியழகனின் மகன் மதன்குமார் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2ம் ஆண்டு எம்.டி. தடயவியல் மருத்துவ படிப்பை விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 2ம் தேதி, அவர் விடுதி வளாகத்தில் படுகொலை கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து ஜார்கண்ட் சென்ற மதனின் உறவினர்கள், அம்மாநில காவல் நிலையத்தில் புகாரளித்தனர்... இதைத் தொடர்ந்து மருத்துவர் மதன்குமாரின் உடலை சொந்த ஊருக்கு விமான மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராஞ்சியில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த மதன்குமாரின் உடல், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டிக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டது. உடலை வீட்டு வாசலிலேயே வைத்து உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதிச் சடங்கை செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com