வக்பு சட்டத்தை முழு மனதோடு ஆதரிப்பதாக தமிழக இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை முழு மனதோடு ஆதரிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் கூறியுள்ளார். இதுகுறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், வக்பு வாரியத்தின் பணத்தை ஏழை இஸ்லாலமியர்களுக்கு கொடுத்திருந்தால், அவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டிருப்பார்கள் என்று தெரிவித்தார். வக்பு சொத்துகளை ஏமாற்றி அனுபவிப்பவர்களே, வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story