தீயாய் பரவிய ஜிப்லி டிரெண்ட் - அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து.. ``வில்லாதி வில்லன் AI''

x

இணையவாசிகள் மத்தில திடீர்னு ட்ரெண்டான ஜிப்லி மோகம் இன்னும் குறையல... கேலரி மொத்தத்தையும் ஜிப்லி இமேஜ மாத்திட்டு வராங்க..

ஆனா உண்மைல ஆல்பம் கிரியேட் பண்றது நீங்க இல்ல... வில்லாதி வில்லன் AI தான்னு போலீஸ் விடுத்திருக்கும் எச்சரிக்கை இது...

ஜிப்லி - Tech உலகத்துல இதுவும் ஒரு Trendsetter -னே சொல்லலாம்.

நம்மளோட கற்பனைகள லைவ்வா மாற்றுதுனு youngsters-ல தொடங்கி oldsters வரைக்கும் பலரும் இந்த வைப்புகுள்ள போனாங்க.

ஜிப்லில போட்டோஸ் எடிட் பண்ணி அத சோஷியல் மிடியால ஷேர் பண்றதன் மூலமா நாங்களும் ட்ரெண்ட்ல இருக்கோம்னு prove பண்ணாங்க..

ஒருகாலத்துல Filter effect- னாளயே இன்ஸ்டாகிராம் ஃபேமஸ் ஆன மாதிரி, இன்னைக்கு Chatgpt க்கு அதிகமான Users சம்பாதிச்சு கொடுத்திருக்கு ஜிப்லி.

எழுறது உண்டு.

அப்படித்தான் ஜிப்லி ட்ரெண்டுக்கும், ஆர்டிஸ்ட்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புச்சு.

1985 ம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஹயாவோ மியாசாக்கி ( Hayao Miyazaki ) என்பவரால உருவாக்கப்பட்டது தான் Studio Ghibli.

கிட்டத்தட்ட 40 வர்ஷமா குழந்தைகள கவரக்கூடிய வகையிலான animation படங்கள இந்த நிறுவனம் தயாரிச்சுட்டு வராங்க.

இந்த நிலையில் தான் சமீபத்துல open ai chatgpt - யோட 4.ஓ version update ஆகுச்சு. அதுல, users - க்கு image generation features - ம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த அரிய வாய்ப்ப பயன்படுத்திகிட்ட user அவங்களோட gallery- உள்ள புகைப்படங்கள chatgpt - ல பகிர்ந்து இத அப்படியே ஜிப்லிய மாற்றி கொடுனு கேட்க ஆரம்பிச்சாங்க... AI - யும் அலாவுதீன் படத்துல வர்ற பூதம் மாதிரி users- ஸோட ரெக்வஸ்ட்ட அப்படியே நிறைவேற்றி மேஜிக் பண்ணி இருக்கு...

அதோட continuation - ஆ தான் இந்த ஜிப்லி ட்ரெண்ட் உருவானது.

ஆனா, இது ஓவியர்களோட கலை படைப்ப திருடுறதா குற்றம் சாட்டின பலரும், சோஷியல் மீடியாவுல

STOP THIS TREND- னு hashtag போட தொடங்கினாங்க...

கிரியேட்டிவிட்டிய எந்த டெலிகிராம்ல டவுன்லோடு பண்றதுன்னு

கேட்க கூடிய சில நெட்டிசன்கள் AI கிட்டயே கேட்கக் கூடிய நெட்டிசன்கள் எதற்கும் செவி சாய்க்காம "அவங்கிடக்குறான் இது நல்லா இருக்குன்னு“ என தொடர்ந்து Ghibli இமேஜ generate பண்ணிட்டு இருந்தாங்க.

இந்த சூழல்ல தான் STOP THIS TREND - னு official- லான ஒரு எச்சரிக்கையும் வந்திருக்கு...

இந்த முறை எச்சரித்திருப்பது படைப்பாளிகள் இல்ல, நம்முடைய சைபர் கிரைம் போலீஸ்.

இந்த Ghibli TREND மோசமான சைபர் குற்றங்கள் நிகழ நாமே license கொடுப்பதற்கு சமம்னு எல்லாரையும் அலார்ட் பண்ணி இருக்காங்க.

Ghibli புகைபடங்கள உருவாக்க, நாம அதுக்கு கொடுக்கக்கூடிய ஒரிஜினல் புகைப்படங்கள் தான் AI நிறுவனங்களோட database.

அதைவெச்சி நம்மள தற்காலிகமா சந்தோசப்படுத்துற மாதிரி கார்டூன் அல்லது அனிமேஷன் இமேஜ் கிரியேட் பண்ணி ... இந்த வெச்சிக்கோனுன்னு AI தந்தாலும், இதுக்கு பின்னணில பல சட்டவிரோத செயல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறதா சைபர் க்ரைம் நிபுணர்கள் எச்சரிக்கிறாங்க...

நம்மளோ டேட்டா மொத்தமும் AI - க்கு கிடைக்கிறன் மூலமா அது நம்மளோட பிரைவேஸிக்குள்ள Sneak பண்றதாவும், நம்மள கண்காணிக்கிறதாவும் தெரிவிக்கிறாங்க.

ஒரு முறை AI - கிட்ட நம்மளோட தரவுகள கொடுத்துட்டா அத erase பண்றதுக்கு நம்மளோட சிட்டி ரோபாவால கூட முடியாதாம்.


Next Story

மேலும் செய்திகள்