ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பூசாரி திடீர் மரணத்தால் பரபரப்பு
ஜீவசமாதி அடைவதாக கூறியவருக்கு நேர்ந்த நிலைமை... ஓரு புறம் போலீசார் எதிர்ப்பு...மறுபுறம் சீடர்கள் ஆதரவு... என்ன நடந்தது....
சேலம் அருகே ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பூசாரி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டையாம்பட்டி கஞ்சமலை அடிவாரம் பகுதியில் சந்திரபிரகாசம் என்பவர் ஜிவசமாதி அடைவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்த தகவலை கேள்விப்பட்ட போலீசார், ஜீவசமாதி அடைவது சட்டத்திற்கு புறம்பானது என கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு துங்க சென்ற அவர், மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
ஆனால் பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஜிவசமாதி அறிவித்து விட்டதால் தியான நிலையில் உயிரிழந்துவிட்டதாக அவரது சீடர்கள் கூறினார்.
