Gun Shoot | அறியாமலேயே தன் தாய் சாவுக்கு தானே காரணமான மகன்

அறியாமலேயே தன் தாய் சாவுக்கு தானே காரணமான மகன்

#motherson #gunshoot மகன் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்து தாய் உயிரிழப்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, நாட்டுத் துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெண்ணந்தூர் அடுத்த பழந்தின்னிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் - செல்வி தம்பதியினரின் 17 வயது மகன், வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியைச் சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி வெடித்ததில், அதிலிருந்த குண்டுகள் தாய் செல்வியின் தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் பாய்ந்தன. சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் நாட்டுத் துப்பாக்கியை இயக்கிய சிறுவன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com