அடுப்பின் அடியில் மறைந்திருந்த பாம்பு - அலேக்கா பிடித்து தூக்கிய நபர்

x

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் தனது வீட்டின் சமையலறையில் இரவு உணவு தயார் செய்துள்ளார். அப்போது, அடுப்பின் அடியில் எதோ சத்தம் வந்த நிலையில், அதனைப்பார்த்த கார்த்திக் அதில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் மறைந்திருந்த 3 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்