டாஸ்மாக் திறப்பதற்கு முன்பே நடந்த அதிர்ச்சி - தீயாய் பரவும் வீடியோ

x

டாஸ்மாக் கடையை திறப்பதற்கு முன்பே பிளாக்கில் மதுபானங்கள் விற்பனை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே பிளாக்கில் மதுபானங்களை விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

கடை திறப்பதற்கு முன்பே காலை 6 மணி முதல் 12 மணி வரையில் மதுபான கடையின் சிறிது தூரத்தில் அமைந்துள்ள புளியந்தோப்பில் வைத்து தனிநபர் மூலம் இரண்டு மடங்கு விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே போன்று பிளாக்கில் மது பாட்டில்களை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த செயலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்