ஆன்லைனில் உள்ளாடை ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

திருச்சியில், பேஸ்புக் விளம்பரத்தை நம்பி பிரபல நிறுவனத்தின் உள்ளாடைகளை ஆர்டர் செய்தவருக்கு சாதாரண உள்ளாடையும், 2 சோப்புகளும் வந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தைப் பார்த்து 999 ரூபாய்க்கு 8 உள்ளாடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால், அவருக்கு ஒரு சாதாரண உள்ளாடையும், இரண்டு சோப்பு கட்டிகளும் பார்சலில் வந்துள்ளன. டெலிவரி செய்த நபர் பொருளைத் திருப்பி எடுக்க மறுத்துவிட்டதால், திருவேங்கடம் ஏமாற்றம் அடைந்துள்ளார். எனவே, இதுபோன்று ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்