TN Election 2026| யாருக்கு ஓட்டு போட்டேன் என்ற ரகசியத்தை வெளியே சொன்னவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாருக்கு ஓட்டு போட்டேன் என்ற ரகசியத்தை வெளியே சொன்னவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
#ntk #tnelection2026 வாக்களித்த வீடியோவை வெளியிட்ட நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழவூரில், தேர்தல் விதிகளை மீறி வாக்களித்ததை வீடியோவாகப் பதிவிட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆவரைக்குளம் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜெகதீஷ் அகிலன் என்பவர் தான் வாக்களித்த விபரத்தை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து வாக்குச்சாவடி அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், பழவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஜெகதீஷ் அகிலன் மீது வழக்கு பதிவு செய்தனர். வாக்கு ரகசியத்தை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
